தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு ஆகஸ்ட் 15 வரை இயக்கப்படவிருக்கும் விமானங்களின் பட்டியல்..!!

இந்தியாவில் சிக்கி தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகம் திரும்புவதற்கான விமான பயண டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. ஜூலை 12 முதல் 26 வரையிலான நாட்களிலும் இதுபோன்று இந்தியாவிலிருந்து அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்கப்படவிருக்கும் இந்த விமானங்களில் பயணிக்க ICA அல்லது GDRFA ஒப்புதல் பெற்றிருப்பது அவசியம் என்றும், 12 வயதிற்கு மேற்பட்ட பயணிகள் கட்டாயம் கொரோனாவிற்கான நெகடிவ் PRC டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு நாளை முதல் ஆகஸ்ட் 15 ம் தேதி வரையிலும் இயக்கப்படவிருக்கும் விமானங்களில் 27 விமானங்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அமீரகம் வரும் விமானங்களின் விபரங்கள்
திருச்சியில் இருந்து அமீரகம் வரும் விமானங்களின் விபரங்கள்