KSA : 3 நாட்களாக காணாமல் தேடப்பட்ட நபர் பாலைவனத்தில் இறைவணக்க நிலையிலேயே உயிரிழப்பு..!!

சவூதி அரேபியாவில் மூன்று நாட்களாக காணாமல் தேடப்பட்ட நபர் ரியாத் மாகாணத்தில் இருக்கும் ஒரு பாலைவனத்தின் நடுவில் இஸ்லாமியர்களின் இறைவணக்க நிலையில் இருந்தபடியே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
துவாய்ஹி ஹமூத் அல் அஜலீன் எனும் நபர் ரியாத்தில் இருக்கக்கூடிய வாதி அல் தவாசீர் பகுதியில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் தேடப்பட்டு வந்ததாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
40 வயதான அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு பாலைவனத்தின் நடுவில் உயிரிழந்த நிலையில் மீட்புக்குழுவினர் அவரை கண்டுபிடித்துள்ளனர். அவர், தான் ஓட்டி சென்ற வாகனத்தில் விறகுகளை சேகரித்த வண்ணம் பாலைவனத்தில் உயிரிழந்திருக்கும் வீடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.
العثور على #مفقود_وادي_الدواسر متوفياً وهو ساجد لله تعالى..pic.twitter.com/FClNDNk6xz
— هاشتاق العرب (@TheArabHash) July 20, 2020