கொரோனாவை வென்ற அமீரகம்..!! கடந்த 24 மணி நேரத்தில் ஒருவரும் மரணிக்கவில்லை ..!! மகுட இளவரசர் பெருமிதம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் எதுவும் ஏற்படவில்லை என்று அபுதாபியின் மகுட இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொடர்பான இறப்புகள் எதுவும் இன்று நாங்கள் அறிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனாவிற்கு எதிராக முன்னின்று போராடும் அனைத்து ஹீரோக்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்ததுடன் குடியிருப்பாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்காக பாராட்டியும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொரோனா தொற்றுநோய்க்கான சவாலை சமாளிப்பதில் நாம் ஒன்றாக இணைந்து தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Today we announce no deaths related to COVID-19 in the UAE in the last 24 hours. Our deepest gratitude to our frontline heroes and to society for their commitment to adhering to precautionary measures. We must continue our collective efforts in tackling this challenge.
— محمد بن زايد (@MohamedBinZayed) July 15, 2020