ஓமான் : இன்று முதல் விசா புதுப்பித்தலை தாமதம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்..!! ROP அறிவிப்பு..!!
ஓமான் நாட்டில் இன்று ஜூலை 15 முதல் காலாவதியான விசாவினை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டின் ராயல் ஓமான் காவல்துறை (ROP) அறிவித்துள்ளதாக ஓமான் நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விசாவினை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தாலும், இந்த அபராதம் ஓட்டுநர் உரிமங்களுக்கு பொருந்தாது என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ள ராயல் ஓமான் காவல்துறையின் சேவை மையங்களுக்குச் செல்வதன் மூலமே புதுப்பித்துக்கொள்ள முடியும் என்றும் ஆன்லைனில் புதுப்பித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்களது ரெசிடென்ஸ் அட்டையை புதுப்பிக்க பாஸ்போர்ட் மற்றும் சிவில் நிலை பொது இயக்குநரகத்தை அணுக வேண்டிய தேவையில்லை என்றும் அவர்கள் ROP சேவை மையங்களை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மஸ்கட்டில் இருக்கும், அல் கூத், அல் அமரத், மாபெலா, குரியாத் காவல் நிலையங்களில் ROPயின் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அது தவிர அஸாய்பா, அல் தஹிலியா பகுதியில் இருக்கும் அல் ஹம்ரா காவல் நிலையம் மற்றும் தோஃபர் பகுதியில் இருக்கும் மர்முல் ஆகிய இடங்களிலும் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், வாகன பதிவு, பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்தல் மற்றும் அடையாள அட்டைகள் புதுப்பித்தல் போன்ற அனைத்து சேவைகளையும் இந்த மையங்கள் வழங்குகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
source : Oman Observer