ஜூலை 31 ம் தேதி ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் என சவூதி அரேபியா அறிவிப்பு..!!
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ம் நாளன்று ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும். தற்பொழுது இந்த வருடத்திற்கான ஹஜ் பெருநாளிற்கான தினத்தை சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) இஸ்லாமிய மாதமான துல் காய்தா மாதத்தின் 30 ஆம் தேதி என்றும், ஜூலை 22 புதன்கிழமை, துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் எப்போதும் துல் ஹஜ் மாதத்தின் 10 வது நாளில் கொண்டாடப்படும் என்பதால், வரும் ஜூலை 31 ம் தேதி ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் என்று சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது.
இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் தொடக்க நாளை சவூதி அரேபியாவில் இருக்கும் பிறை பார்க்கும் கமிட்டி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும், துல் ஹஜ் மாதத்திற்கான முதல் பிறை இன்று (திங்கள்) காணப்படவில்லை என்றும், நாளை (செவ்வாய்க்கிழமை) சூரியன் மறைவுக்கு பிறகு தெளிவாகத் தெரியும் என்றும் இந்த கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், ஹஜ் பெருநாளானது ஜூலை 31 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான ஹஜ் யாத்திரைக்கு சவூதியில் வசிக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் மற்றும் குடிமக்கள் என மொத்தம் 10,000 வழிபாட்டாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe
source : Gulf News