ஓமான் நாட்டில் ஜூலை 25 முதல் லாக்டவுன் அறிவிப்பு..!!
ஓமான் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் இருக்கும் கொரோனாவிற்கான உச்சக்குழு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரையிலான நாட்களில் அந்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் லாக்டவுன் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
லாக்டவுன் விதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வகையான இயக்கங்களுக்கும் தடை விதிப்பதாகவும், பொது இடங்களையும் கடைகளையும் மூடுவதற்கும், பகல் நேரத்தில் தீவிரமான ரோந்து மற்றும் சோதனை சாவடிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈத் விடுமுறை காலங்களில் அனைத்து வகையான கூட்டங்கள், குறிப்பாக ஈத் பிரார்த்தனைகள், பாரம்பரிய ஈத் சந்தைகள் ஆகியவற்றிற்கு தடை விதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe