அபுதாபி, துபாய் எல்லையில் உள்ள லேசர் பரிசோதனை மையத்தில் அடுத்த இரு வாரங்களுக்கான புக்கிங் முடிந்தது.!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என அபுதாபி பேரிடர் மேலாண்மைக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் அபுதாபிக்குள் நுழைவதை எளிதாகும் விதமாக, துபாய் அபுதாபியின் எல்லை பகுதியான கந்தூத் (Ghantooth) பகுதியில் கொரோனாவிற்கான லேசர் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை மையம் ஒன்றையும் அமைத்திருந்தது.
மற்ற கொரோனா பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்படும் PCR கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை (370 திர்ஹம்) விட லேசர் பரிசோதனைக்கு குறைந்த கட்டணமே (50 திர்ஹம்) வசூலிக்கப்படுவதால் அபுதாபிக்குள் நுழைய விரும்பும் பொதுமக்கள் பெரும்பாலும் லேசர் பரிசோதனையே மேற்கொண்டு வருகின்றனர். இப்பரிசோதனை மேற்கொள்வதற்கு https://ghantoot.quantlase.com/appointment/update-details/ என்ற வலைத்தளத்தில் சென்று முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்பொழுது லேசர் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு அடுத்த இரு வாரங்களுக்கு முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு செல்ல விரும்பி லேசர் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு ஆகஸ்ட் 13 ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதலான நேரத்தில் இருந்தே முன்பதிவு செய்ய முடிவதாக கூறப்படுகின்றது.
லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்து மேற்கொள்ளப்படும் கொரோனாவிற்கான டிரைவ்-த்ரு சோதனை மையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 4,000 சோதனைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.