அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜூலை 23, 2020) : பாதிக்கப்பட்டோர் 254 பேர்..!! குணமடைந்தோர் 494 பேர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 23, 2020) புதிதாக 254 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 57,988 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் கொரோனாவிற்கு இன்று யாரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 342 ஆக இருக்கிறது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 494 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 50,848 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.