அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜூலை 7, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 532 பேர்..!! இருவர் உயிரிழப்பு..!! குணமடைந்தோர் 993 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2020) புதிதாக 532 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 52,600 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக இருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 993 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 41,714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.