UAE வருபவர்கள் சொந்த நாடுகளில் கொரோனா சோதனை மேற்கொள்ள ஆன்லைன் வசதி தொடக்கம்..!! ஆய்வகத்தில் நேரடியாக பெறப்பட்ட சான்றிதழை பயன்படுத்த முடியாது..!! பியூர் ஹெல்த் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க விரும்புபவர்கள் கட்டாயம் மேற்கொள்ளவேண்டிய பயணத்திற்கு முந்தைய கோவிட் -19 பரிசோதனைக்கு புதிய ஆன்லைன் வசதி முறையை பியூர் ஹெல்த் நிறுவனம் (Pure Health) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அமீரகம் பயணிக்கும் பயணிகள் தங்கள் சொந்த நாடுகளில், கொரோனா வைரஸை பரிசோதிக்க பியூர் ஹெல்த் நிறுவனத்தில் பதிவுசெய்திருக்கும் ஆய்வக வசதிகள் கொண்ட நெட்வொர்க் மூலம் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த பியூர் ஹெல்த் நிறுவனம், அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (FAIC) உடன் இணைந்து, கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள ஒரு சர்வதேச ஆய்வக கூட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் உலகின் பல நாடுகளை சார்ந்த அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களும் இணைந்துள்ளன. கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப அனைத்து நடைமுறைகளும் இந்த கூட்டு முயற்சியின் வாயிலாக திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து பியூர் ஹெல்த் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளின் தலைவர் பிரமோத் பி.என் கூறுகையில், “இது உலகளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் திட்டமாகும். இந்த புதுமையான திட்டத்தின் மூலம் பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிப்பதில் அமீரகம் ஒரு முன்னோடியாக மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒவ்வொரு நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் பட்டியலை பியூர் ஹெல்த் நிறுவனம் தனது ஆன்லைன் போர்டலில் பட்டியலிட்டுள்ளது. கொரோனா சோதனை மேற்கொள்ள பயணிகள் அனைவரும் இங்கு எளிதாக பதிவு செய்யலாம். அனுமதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் தங்களது விவரங்களை உள்ளிட்டு, தங்கள் நாடு, நகரம் மற்றும் போர்ட்டலில் விருப்பமான ஆய்வகத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கொரோனா சோதனைக்கு செய்து கொள்ளலாம். சோதனை முடிவுகள் பகிரப்பட்ட போர்ட்டல் மூலம் FAIC உடன் பகிரப்படுகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
மேலும், “கொரோனா சோதனைகளுக்கு முன்பதிவு செய்வதற்கும் ஆய்வக சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கும் பியூர் ஹெல்த் ஆன்லைன் போர்ட்டலை பயன்படுத்த வேண்டும். அமீரகம் செல்ல விரும்பும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதனை நடத்திய தகவலை, அமீரக அரசு பெறுவதை இந்த ஆன்லைன் போர்டல் உறுதி செய்யும். சோதனை மேற்கொண்ட பயணிகள் தங்களது பயணத்திற்கான பியூர் ஹெல்த் சான்றிதழை எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் இந்த சான்றிதழ் மட்டுமே அமீரகம் செல்லும் விமான நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்” என கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “சோதனை மேற்கொண்ட பயணிகள், நேரடியாக ஆய்வகத்தால் வழங்கப்பட்ட கொரோனா தொற்றிற்கான முடிவுகள் குறித்த சான்றிதழை பயன்படுத்த முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சோதனை முடிவுகள், பியூர் ஹெல்த் நிறுவனத்தின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவுசெய்த மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பியூர் ஹெல்த் ஆன்லைன் போர்டல் வழியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாதவர்களின் சோதனை முடிவுகள் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் போர்டல் வாயிலாக பரிசோதனையை முடித்தவர்கள் மின்னஞ்சல் மூலம் பியூர் ஹெல்த் சான்றிதழைப் பெறவில்லை எனில், பரிசோதனை மேற்கொண்ட ஆய்வகங்களை பின்தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Pure Health Covid-19 testing center link :
https://screening.purehealth.ae/application