UAE : ஐந்தாம் கட்டத்திற்கான டிக்கெட் புக்கிங் 4 மணிக்கு துவக்கம்..!! துணைத்தூதரகம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருக்கும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்திற்கான விமான டிக்கெட் முன்பதிவானது இன்று மாலை நான்கு மணிக்கு துவங்கவிருப்பதாக அமீரகத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு செல்லவிருக்கும் விமானங்களின் டிக்கெட் முன்பதிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் மூலமாகவோ அல்லது பயண முகவர்கள் (Travel Agent) மூலமாகவோ புக்கிங் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விமானங்களின் விபரங்களானது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் பயணம் செய்ய விரும்புபவர்கள் தூதரகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
All Indian nationals are advised to take advantage of @airindiain and @FlyWithIX for flights from Dubai, Sharjah and Abu Dhabi to various destinations in India. @MEAIndia @IndembAbuDhabi pic.twitter.com/jGgx73qW6J
— India in Dubai (@cgidubai) July 27, 2020