பொதுமன்னிப்பு வழங்கியும் நாடு திரும்பாத 120,000 நபர்களை கைது செய்து நாட்டை விற்று வெளியேற்ற குவைத் அரசு திட்டம்..!
குவைத் நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக காலாவதியான விசாக்களுடன் இருந்துவந்த வெளிநாட்டவர்கள், அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற குவைத் அரசாங்கம் ஏப்ரல் மாதம் பொது மன்னிப்பு வழங்கியது. இந்த பொது மன்னிப்பின் மூலம் விசா கலவாதியானவர்களில் ஒரு பகுதியினர் நாட்டை விட்டு சென்றிருந்தாலும், இதனை பயன்படுத்தாமல் தற்பொழுது வரை 120,000 நபர்கள் குடியிருப்பு சட்டத்தை மீறி நாட்டில் இருப்பதாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதற்காக அவர்களை கைது செய்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் அதனை செலுத்திய பின்னர், சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்ததன் காரணமாக அவர்களை நாடு கடத்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அபராதத் தொகையானது ஒரு நபருக்கு அதிகபட்சம் 600 குவைத் தினார் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டத்திற்கு புறம்பாக இருப்பவர்கள் நாடு திரும்புவதற்கான விமான பயண டிக்கெட்டிற்கான கட்டணத்திற்கு அவர்களின் ஸ்பான்சர்கள் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படும் என்றும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
தற்போது சட்டத்திற்கு புறம்பாக குவைத்தில் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலோர் விசா வர்த்தகர்களால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்ட தொழிலாளர்கள் என்றும் குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.