சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!! அபுதாபி வர ICA ஒப்புதல் தேவை இல்லை..!!
இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு, பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்யப்பட்ட செல்லுபடியாகும் அமீரக குடியிருப்பு விசாவுடன் பயணிக்கும் பயணிகள், இன்று (ஆகஸ்ட் 11) முதல் அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) ஒப்புதல் பெற தேவையில்லை என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அபுதாபிக்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து கோவிட் -19 PCR நெகடிவ் சோதனை முடிவைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் மேலும் கொரோனா சோதனை முடிவின் செல்லுபடியாகும் காலம் 96 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தியாவிலிருந்து துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையம் பயணிப்பவர்களுக்கு ICA அல்லது GDRFA ஒப்புதல் தேவை எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 முதல் அபுதாபி வரும் விமானங்களுக்கு ICA ஒப்புதல் தேவை இல்லை என அபுதாபி விமான நிலைய நிர்வாகம் நேற்று அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Effective 11/08/2020, all passengers with resident permit stamped in their passport do not require ICA/GDRFA approval for their travel from India to Abu Dhabi.
Kindly check https://t.co/ttMNNbid7H for updates at the moment. @IndembAbuDhabi pic.twitter.com/1iGweNw48i
— Air India Express (@FlyWithIX) August 11, 2020