அபுதாபி குடியிருப்புக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்து..!!
அபுதாபியில் இருக்கக்கூடிய குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள 9 மாடி கட்டிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு அபுதாபி சிட்டியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது முறையாக மூன்று நாட்களுக்குள்ளேயே இன்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அபுதாபி சிட்டியில் அமைந்திருக்கும் ஷேய்க் ரஷீத் பின் சயீத் தெருவில் உள்ள கட்டிடத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், விபத்து நிகழ்ந்தவுடனேயே கட்டிடத்தில் தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Another bad fire in Abu Dhabi – what’s going on 😭 pic.twitter.com/7lCgsVucx3
— Tamanna Wahi (@tamannaW) August 9, 2020