துபாய் : பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை நேரடியாக அரசு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ள புதிய முயற்சி..!! அறிமுகப்படுத்திய துபாய் ஊடக அலுவலகம்..!!

சமூக ஊடக தளமான ட்விட்டரின் மூலம் இனி தங்களின் சந்தேகங்களை துபாயில் உள்ள மூத்த அரசாங்க அதிகாரிகளிடம் பொது மக்கள் நேரடியாகவே கேட்கும் படியான புதிய முயற்சி ஒன்று துபாய் ஊடக அலுவகத்தினால் (Dubai Media Office) தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) துபாய் ஊடக அலுவலகத்தினால் தொடங்கப்பட்ட இந்த புதிய முயற்சியின் மூலம் துபாயின் மூத்த அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம் என்றும் அதற்கான பதிலானது துபாய் ஊடக அலுவலகத்தின் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சியின் ஒரு பகுதியாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதல் நபர் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டு விவகார இயக்குநரகத்தின் (GDRFA) இயக்குநர் ஜெனரலான மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி அவர்கள் என்று ஊடக அலுவலகம் நேற்று தெரிவித்திருந்தது.
பொது உறுப்பினர்கள் #AskDXBOfficial என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி விசா தொடர்பான கேள்விகள் உட்பட தங்களின் கேள்விகளை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
GDMO’s new initiative #AskDXBOfficial invites you to ask any question you have for #Dubai’s senior officials. Responses will be posted on our official platforms. You can address your questions to the Director General of @GDRFADUBAI using the #AskDXBOfficial hashtag. pic.twitter.com/eHR9MZwWS9
— Dubai Media Office (@DXBMediaOffice) August 15, 2020