அமீரக செய்திகள்

UAE: ஈத் தினத்தையொட்டி PCR பரிசோதனை செய்துகொள்ள குடியிருப்பாளர்களுக்கு NCEMA அறிவுரை..!

அமீரகத்தில் ஈத் அல் அதாவின் போது குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய கோவிட் பாதுகாப்பு விதிகளை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளது. ஈத் தினத்தில் பலியிடப்பட்ட குர்பானி இறைச்சிகளை அண்டை வீட்டாருக்கு விநியோகிக்க அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அவற்றை விநியோகிப்பதற்கு முன் சுத்தம் செய்யப்பட்டு பைகள் அல்லது பெட்டிகளில் வைக்க வேண்டும்.

சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஈத் தினத்தின் 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குர்பானிக்கான விதிகள்:

  • விலங்குகளை வெட்டுவதற்கு உரிமம் பெறாத தொழிலாளர்களிடம் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
  • இறைச்சி கடைகளை ஆய்வு செய்து கூட்ட நெரிசல் இல்லாதவாறு வாங்கிக்கொள்ள அனுமது அளிக்கப்பட்டுள்ளது.

பொது கோவிட் விதிகளை குடியிருப்போர் பின்பற்ற வேண்டும்:

  • கைகுலுக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஈத் தினத்தில் வழிபாட்டாளர்கள் தங்களது குடும்பங்களுகடன் மட்டும் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
  • முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்குமாறு NCEMA கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!