வளைகுடா செய்திகள்
ஓமான் : சுனைனாவில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!!
ஓமானில் இருக்கும் சுனைனா (Sunaynah) பகுதியில் உள்ள ஒரு கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்சிற்கான பொது ஆணையம் (PACDA) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அல் புரைமி (Al Buraimi) கவர்னரேட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறையின் தீயணைப்பு குழுக்கள் சுனைனாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான கடையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயினை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ” என்று செய்தி வெளியிட்டுள்ளது.