குவைத் : இந்தியாவிற்கு செல்லவிருக்கும் விமானங்களின் பட்டியல்..!! தூதரகம் வெளியீடு..!!
குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படவிருக்கும் விமானங்களின் விபரங்களை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 17 வரை இந்தியாவிற்கு சொந்தமான விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இயக்கப்படும் 12 விமானங்களில் 2 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு விமானம் நாளை (ஆகஸ்ட் 14) குவைத்தில் இருந்து சென்னை செல்லும் எனவும் மற்றொரு விமானம் வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி குவைத்தில் இருந்து சென்னை செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானங்களில் பயணம் செல்ல விரும்புபவர்கள் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தூதரகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Flights Schedule from Kuwait (13-17 Aug 2020). For flight reservations and other enquiries, please contact the concerned airlines directly and quote Embassy’s registration id:
Air India:Tel: 22456700,Email: [email protected]
Indigo:Tel: 67716950, Email: [email protected] pic.twitter.com/Tgd5oz77Pp— India in Kuwait (@indembkwt) August 12, 2020