UAE: நோய்த்தொற்று பாதித்தவர்களுக்காக ஏர் ஆம்புலன்ஸில் புதிய வசதி..!!
கொரோனா வைரஸ் மற்றும் பிற தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விமான ஆம்புலன்ஸ் (Air Ambulance) மூலம் ஏற்றிச்செல்ல புதியதொரு தனிமைப்படுத்தப்பட்ட காப்ஸ்யூல் (Isolation Capsule) வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.
பிராந்தியத்திலேயே முதன் முறையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவ தனிமைப்படுத்தும் முறை வைரஸ் மற்றும் பிற நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று காவல்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அபுதாபி காவல்துறை விமானப் போக்குவரத்துத் துறையின் துணை இயக்குநர் கர்னல் பைலட் ஒபைத் முகமது அல் ஷெமெலி அவர்கள், இந்த புதிய முறையானது சமூகத்திற்கு சிறந்த சேவையை வழங்குவதில் ஐக்கிய அரபு அமீரக தலைமையின் ஆர்வத்தின் பிரதிபலிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனாவினை எதிர்த்துப் போராடுவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்பவும், அபுதாபி காவல்துறையின் மத்திய செயல்பாட்டுத் துறையின் ஆதரவோடும், விமானத் துறையானது தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட காப்ஸ்யூலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையானது பிராந்தியத்திலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
அபுதாபி காவல்துறையின் மற்றொரு அதிகாரி டாக்டர் அலி சைஃப் அல் தோரி கூறுகையில், இந்த புதிய மருத்துவ தனிமைப்படுத்தலில் நோயாளிகளை விமான ஆம்புலன்ஸில் ஏற்றிச்செல்லும் முறையானது தற்பொழுதுள்ள தொற்றுநோய காலத்தை விட எதிர்காலத்தில் ஒரு பெரிய நோக்கத்திற்கு உதவும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “காப்ஸ்யூல் என்பது ஒரு முழு மருத்துவ தனிமைப்படுத்தும் முறையாகும். இது ஒரு நோயாளியிடமிருந்து குடும்ப உறுப்பினர்கள், துணை மருத்துவர்கள் உள்ளிட்ட மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், இந்த காப்ஸ்யூல் முறையை கொரோனாவிற்கு மட்டுமல்லாமல் அனைத்து வகையான தொற்று நோய்களுக்கும் பயன்படுத்தலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram