Uncategorizedவளைகுடா செய்திகள்

போலி சர்டிபிகேட்டை வைத்து இன்ஜினியர் விசா பெற்றதன் எதிரொலி.!! இந்திய இன்ஜினியர்களுக்கு NOC வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்..!!

குவைத் நாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களில் சிலர் இன்ஜினியர் விசா பெறுவதற்காக போலி ஆவணங்களை பயன்படுத்தி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இன்ஜினியர் விசா பெற்று குவைத் நாட்டில் பணிபுரிய “குவைத் சொசைட்டி ஆஃப் இன்ஜினியர்ஸ்” ஆணையத்தால் வழங்கப்படும் தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate- NOC) இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர்களுக்கு வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குவைத் சொசைட்டி ஆஃப் இன்ஜினியர்ஸ் (Kuwait Society of Engineers – KSE) மற்றும் மனிதவள பொது ஆணையம் (Public Authority of Manpower) இணைந்து இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், சில இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் ஏற்கனவே இன்ஜினியர் விசா பெறுவதற்கு விண்ணப்பித்து, அவர்களின் சான்றிதழ்கள் குவைத் நாட்டின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என சொசைட்டி ஆஃப் இன்ஜினியர்சால் அங்கீகாரம் மறுக்கப்பட்டிருந்தும், அவர்கள் இன்ஜினியர் விசா பெற்று பணிபுரிந்து வந்ததை தற்போது KSE கண்டறிந்துள்ளது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஒர்க் பெர்மிட்டை புதுப்பிக்கும் போது நிறுவனத்தின் சார்பாக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சில மோசடி கும்பல்களால் போலி அரசாங்கத்தின் முத்திரைகளை பயன்படுத்தி போலி சான்றிதழைகளை உருவாக்கியும் மோசடி வேளையில் ஈடுபட்டு வந்திருந்தது தெரியவந்துள்ளது.

குவைத் நாட்டில் இன்ஜினியர் விசா தொடர்புடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதற்காக 3,000 இந்திய சான்றிதழ்களை அங்கீகரிக்க குவைத் சொசைட்டி ஆஃப் இன்ஜினியர்ஸ் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் இந்திய நாட்டை சேர்ந்த ஏழு குடியிருப்பாளர்கள், தங்கள் பல்கலைக்கழக பட்டங்கள் அல்லது உத்தியோகபூர்வ ஆவணங்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!