அமீரக செய்திகள்

UAE: அனுமதியின்றி செல்லும் டிரக்குகள், காலாவதியான ரிஜிஸ்டரேஷன் கொண்ட வாகனங்களைக் கண்டறிய புதிய ரேடார்…!! ராஸ் அல் கைமா காவல்துறை அறிவிப்பு..!!

அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் உள்ள மசாஃபி-ராஸ் அல் கைமா சாலையில் அனுமதியின்றி (permit) கடக்கும் டிரக்குகள் மற்றும் காலாவதியான ரிஜிஸ்டரேஷனை கொண்ட கார்களை இனி ரேடார்கள் கண்டறியும் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ராஸ் அல் கைமா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் மூலோபாயத்தை செயல்படுத்துவதன் நோக்கத்துடனும், சாலைகளின் பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஸ் அல் கைமா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட நேரங்களைத் தாண்டி அல்லது அனுமதியின்றி சாலையைப் பயன்படுத்தும் டிரக்குகளின் விதிமீறல்களைக் கண்காணித்து, மசாஃபி சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த ரேடார் செயல்படுத்தப்படும் என்று ராசல் கைமா காவல்துறையில் உள்ள மத்திய செயல்பாட்டுத் துறையின் பொதுத் துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் ரேடார்கள், காலாவதியான பதிவெண் கொண்ட வாகனங்களையும் கண்டறியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நடைமுறையானது இன்று (அக்டோபர் 17) முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஸ் அல் கைமா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையானது அனைத்து மசாஃபி சாலை பயனர்களும் தங்கள் வாகனங்களின் ரிஜிஸ்டரேஷனை புதுப்பிக்குமாறும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் சாலையில் விதிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் வாகனம் ஓட்டுமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!