அமீரகம் திரும்புவதற்கு “Entry Allowed” எனும் பச்சை நிறத்திலான தகவல் அவசியம்..!! பயண முகவர்கள் அறிவுறுத்தல்..!!

வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் தங்களின் பயண தேவைகளை முழுமையாக சரிபார்த்துக்கொள்ளுமாறு பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதில் அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) இணையதளத்தில் (https://uaeentry.ica.gov.ae) தங்களின் விபரங்களை செலுத்தி பயண அனுமதி பெறுவது மற்றும் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பது போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ICA வின் இணையதளத்தில் தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்யும் குடியிருப்பாளர்களுக்கு பச்சை நிறத்தில் பயண அனுமதி கொடுக்கப்படுவதாகவும் சிவப்பு நிறத்தில் பயண அனுமதி மறுக்கப்படுவதாகவும் செய்தி கிடைக்கிறது. இதில் பயண அனுமதி கிடைக்கப்பெறும் குடியிருப்பாளர்கள் கொரோனாவிற்கான சோதனை மேற்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சில குடியிருப்பாளர்களுக்கு “உங்கள் பாதுகாப்பை முன்னிட்டு 60 நாட்களுக்குப் பிறகு உங்கள் பயணத் தேதியை மாற்றியமைப்பதற்கான சாத்தியத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம். உங்கள் புரிதலுக்கு நன்றி, பாராட்டுகிறோம்” என்ற செய்தி கிடைக்கிறது. இந்த செய்தியைப் பெறும் குடியிருப்பாளர்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய செய்தியை பெற்று டிக்கெட் முன்பதிவு செய்த குடியிருப்பாளர்களை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமான டிக்கெட்டினை முன்பதிவு செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளவேண்டிய பயண முகவர்கள் கூறிய படிப்படியான வழிமுறைகள்
Step 1: துபாய் தவிர அமீரகத்தின் மற்ற பகுதிகளுக்கு பயணிக்கும் நபர்கள் தங்கள் ஆவணங்களின் செல்லுபடியை uaeentry.ica.gov.ae என்ற வலைதளத்தில் சரிபார்க்க வேண்டும். துபாய்க்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்கள் பயணத்திற்கு முன் GDRFA ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
Step 2: ICA விடம் இருந்து பயண அனுமதி அல்லது GDRFA விடம் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் பயணிகள் தாங்கள் பயணிக்க இருக்கும் விமான நிறுவனம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, ICA விடம் இருந்து பயண அனுமதி கிடைக்காதவர்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டாம்.
Step 3: ஐக்கிய அரபு அமீரகம் அல்லது உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
Step 4: கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை பெற்றதும், விமான டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Step 5: பயணிகள் தாங்கள் பயணிக்க இருக்கும் நாளன்று, சுகாதார அறிவிப்பு படிவத்தில் கையொப்பமிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கொரோனாவிற்கான ட்ராக்கிங் அப்ளிகேஷனான Al Hosn App டவுன்லோடு செய்திருக்க வேண்டும். துபாய் குடியிருப்பாளர்களாக இருந்தால் DXB Smart App அப்ளிகேஷனை டவுன்லோடு செய்திருக்க வேண்டும்
Step 6: பயணிகள் விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாவே விமான நிலையத்தை அடைய வேண்டும்.
குறிப்பு: விசிட் விசா வைத்திருப்பவர்கள் கொரோனாவிற்கான காப்பீடு (Insurance) வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.