ஷார்ஜா விமான நிலையம் வரும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு ICA ஒப்புதல் தேவையில்லை..!! விமான நிலையம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்பி வருவதற்கு ICA ஒப்புதல் தேவையில்லை எனவும், அவர்கள் சுதந்திரமாக பயணிக்கலாம் எனவும் ஷார்ஜா விமான நிலைய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனினும் விமான பயணத்திற்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் அமீரகம் திரும்பும் பயணிகள் தங்களது UAE குடியிருப்பு விசா செல்லுபடியை uaeentry.ica.gov.ae என்ற இணையதளத்தில் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து பயணிகளும் அங்கீகாரம் பெற்ற மையங்களால் வழங்கப்பட்ட COVID-19 நெகடிவ் சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும் என்றும், அந்த சோதனை முடிவு அமீரகம் வருவதற்கு 96 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) அமீரக குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்புவதற்கு ICA விடமிருந்து முன் ஒப்புதல் பெற தேவையில்லை என கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram