இஸ்லாமிய புத்தாண்டையொட்டி விடுமுறை அறிவித்த அமீரக அரசு..!!
இஸ்லாமிய புத்தாண்டு ஆரம்பிப்பதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 23 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அமீரகத்தின் அரசாங்க மனித வள மேம்பாட்டு ஆணையம் (FAHR) அறிவித்துள்ளது.
மனித வள மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுத்துறை ஊழியர்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இதனால் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் என்றும் ஆகஸ்ட் 24 ம் தேதி திங்கள்கிழமை முதல் அவர்கள் பணிக்கு திரும்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்லாமிய புத்தாண்டிற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமீரக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்ததால், ஆகஸ்ட் 23 ம் தேதி தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
FAHR: It has been decided that the Hijri New Year holiday for the year 1442 in the Federal Government of the United Arab Emirates will be on Sunday, 23rd of August 2020, and regular working hours will resume on Monday, 24th of August 2020. pic.twitter.com/6ISWMyEj26
— FAHR (@FAHR_UAE) August 13, 2020