அமீரகம் திரும்புவதற்கான ICA அனுமதி முற்றிலும் ரத்து..!! பயணத்தை உறுதி செய்ய புதிய லிங்க் வெளியீடு..!!

வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களில் செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்புவதற்கு ICA அல்லது GDRFA ஒப்புதல் பெறுவது கட்டாயம் என இருந்துவந்த நிலையில், ஆகஸ்ட் 11 முதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் வரும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு ICA ஒப்புதல் பெற தேவையில்லை என சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ICA அனுமதி இல்லாமல் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு மட்டுமே வரலாம் என அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப ICA விடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்று அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) ஆகியவை தெரிவித்துள்ளன.
இந்த புதிய அறிவிப்பானது இன்று (ஆகஸ்ட் 12) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய அறிவிப்பின்படி, இன்று முதல் பயணிகள் அமீரகத்திற்கு வர நுழைவு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்ப விரும்புவோருக்கு தானாகவே ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் தங்கள் பயண ஆவணங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க https://uaeentry.ica.gov.ae என்ற வலைதள பக்கத்தில் சென்று தங்களின் ஐடி எண், பாஸ்போர்ட் மற்றும் தங்களின் நாடு குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்ளுமாறும் ICA பரிந்துரைத்துள்ளது.
ICA அனுமதி தவிர்த்து தற்போது பயணம் தொடர்பாக கடைபிடிக்கப்படும் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பது உட்பட அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, ICA அனுமதி பெற்ற அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகத்தின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
In order to facilitate returns, the @ICAUAE has developed the current procedures by replacing registration and waiting for approval, to automatically granting pre-approval without the need to submit an application and start the procedures for the return trip.
— NCEMA UAE (@NCEMAUAE) August 12, 2020