அமீரக செய்திகள்

துபாய் டாக்ஸி வேன்களில் 4 நபர்கள் வரை பயணிக்க அனுமதி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாகனங்களில் மூன்று நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. டாக்ஸிகளில் இரு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், துபாயில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து ஆணைய நெறிமுறைகளில் தற்பொழுது ஹாலா டாக்ஸி வேன்களில் (Hala taxi van) 4 பயணிகள் வரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இவை கரீம் அப்ளிகேஷன் (Careem App) மூலம் டாக்ஸி சேவைக்காக பதிவு செய்யப்படும்.

ஹலா வேன் டாக்ஸிகளில் இரண்டு வரிசை பயணிகள் இருக்கை இருப்பதால், ஒரு வரிசைக்கு இரு பயணிகள் என அமர்ந்து சமூக இடைவெளியையும் பராமரிக்க முடியும். மேலும், இந்த வேன் டாக்ஸி சேவைக்கான விலை வழக்கமான டாக்ஸியின் விலைக்கு ஒத்ததாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வேன்கள் துபாய் நகரில் குறிப்பிட்ட அளவிலேயே இயங்கி வருகின்றன என்றும் இதில் பயணிப்பதற்கு கரீம் அப்ளிகேஷனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் காத்திருக்கும் நேரத்தையும் முன்பணத்தையும் அப்ளிகேஷன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது ஹலா வேன்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் (average arrival time) ஆறு நிமிடங்களாக உள்ளது என்று ஹாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹலாவின் தலைமை நிர்வாக அதிகாரி கிளெமென்ஸ் டுடெர்டே இது பற்றிக் கூறுகையில், “ஹாலா வேன் டாக்ஸிகளில் 4 நபர்கள் வரை பயணிக்கலாம் என அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நண்பர்களாக அல்லது குடும்பமாக பயணிக்க வேண்டும் நபர்களுக்கு இது எளிதானதாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவுத்துள்ளார்.

முன்பதிவு செய்வது எப்படி

  • கரீம் அப்ளிகேஷன் (careem app) சென்று ‘ஹலா டாக்ஸி’ (hala-taxi) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • ‘pickup’ செய்ய வேண்டிய இடத்தையும் இறங்கும் இடத்தையும் குறிப்பிட வேண்டும்.
  • கார் வகைகளின் பட்டியலிலிருந்து ‘ஹலா – வான் டாக்ஸி’ (hala – van taxi) என்பதைத் தேர்வுசெய்யலாம். மேலும், அதில் காத்திருப்பு நேரத்தையும் முன்னரே பார்க்கலாம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!