ADVERTISEMENT

வெளிநாட்டு சுகாதார ஊழியர்கள் இனி 10 ஆண்டுகள் மட்டுமே சவூதியில் பணிபுரிய முடியும்..!! சவூதி அரசு அறிவிப்பு..!!

Published: 3 Sep 2020, 11:35 AM |
Updated: 3 Sep 2020, 12:10 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் இருக்கக்கூடிய பல்வேறு துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக அந்நாட்டு குடிமக்களையே பணியில் அமர்த்தும் திட்டமான “‘Saudise’” எனும் திட்டத்தின் கீழ் சமீப காலமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து தற்பொழுது சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டு சுகாதார ஊழியர்களில் சிறந்த மற்றும் உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களைத் தவிர, மற்ற அனைத்து ஊழியர்களும் அந்நாட்டில் 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால், அவர்களின் வேலை ஒப்பந்தங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்கப்படாது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவூதி அல்லாத ஊழியர்களின் வேலை ஒப்பந்தங்களுக்கு 10 ஆண்டுகளை மட்டுமே நிர்ணயிக்கும் சவுதி அரசாங்கத்தின் இந்த புதிய தீர்மானத்தை அமல்படுத்துவதில் மனிதவளத்திற்கான சுகாதார அமைச்சின் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் அல் ஐபன் வெளியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதே போல், “‘Saudise’” எனும் திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை மாதம், சவுதியின் மனிதவள அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ முடிவின்படி, முதல் கட்டமாக 20 சதவீத மருந்தக வேலைகள் (Pharmacy) படிப்படியாக சவூதி குடிமக்களுக்கு மாற்றப்படும் என்றும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இன்ஜினியரிங் துறை சார்ந்த வேலைகளில் 20 சதவீதம் சவூதி நாட்டவர்களை பணியமர்த்த சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஜினியரிங் துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் 20 சதவீத சவூதி நாட்டவர்களை பணியமர்த்த முடிவு..!! கால அவகாசம் வெளியிட்ட அமைச்சகம்..!!

ADVERTISEMENT

KSA : மருந்தகங்களில் வெளிநாட்டினருக்கு பதிலாக குடிமக்களை பணியமர்த்தும் திட்டம் தொடக்கம்..!!