அமீரக செய்திகள்

துபாயில் தற்காலிகமாக மூடப்படும் இரண்டு முக்கிய பாலங்கள்.!! மூடல் நேரம், மாற்று வழிகள் பற்றி வாகன ஓட்டிகளுக்கு RTA நினைவூட்டல்..!!

துபாயின் முக்கிய பாலங்களில் ஒன்றான ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் பராமரிப்புப் பணிகளுக்காக ஐந்து வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் குறிப்பாக தேரா பகுதியில் உள்ள இரண்டு முக்கிய பாலங்களை அடிக்கடி பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை மனதில் வைத்துக் கொள்ளுமாறு துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குடியிருப்பாளர்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

துபாயில் தற்காலிகமாக மூடப்படும் ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் மற்றும் அல் மக்தூம் பிரிட்ஜ் ஆகிய இரண்டு முக்கிய பாலங்களின் மூடல் விவரம் மற்றும் அதற்கான மாற்று வழிகளின் விவரம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

அல் மக்தூம் பாலம்

அல் மக்தூம் பாலம் மார்ச் 30 முதல், புனித ரமலான் மாதம் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் மூடப்படும்.

  • மூடும் காலம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்களும் அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும்.
  • மாற்று வழிகள்: அல் கர்ஹூத் பிரிட்ஜ், பிசினஸ் பே கிராஸிங், அல் ஷிந்தகா சுரங்கப்பாதை, இன்ஃபினிட்டி பிரிட்ஜ்

ப்ளோட்டிங் பிரிட்ஜ்:

  • மூடும் காலம்: நாளை திங்கள்கிழமை (ஏப்ரல் 17) முதல் ஐந்து வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்.
  • மாற்று வழிகள்: 

— ஷார்ஜாவிலிருந்து அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் வழியாக பயணிக்க: கெய்ரோ மற்றும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியாக இன்ஃபினிட்டி பாலத்திற்கான அணுகலை எளிதாக்குவதற்கு அல் மம்சார் எக்ஸிட் வழியைப் பயன்படுத்தலாம். தற்போது இதில் பேருந்து மற்றும் டாக்ஸி மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் நாளை முதல் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படும்.

— தேராவிலிருந்து அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியாக பர் துபாய்க்கு பயணம் செய்ய: வாகன ஓட்டிகள் இன்ஃபினிட்டி பாலத்தைப் பயன்படுத்தலாம்.

— ஷார்ஜாவிலிருந்து அல் இத்திஹாத் சாலை வழியாக பர் துபாய்க்கு பயணிக்க: அல் கர்ஹூத் பிரிட்ஜ் அல்லது அல் மக்தூம் பிரிட்ஜ் வழியாக இன்ஃபினிட்டி பாலத்தை எளிதாக அணுகலாம், மேலும் கெய்ரோ மற்றும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் வழியையும் பயன்படுத்தலாம்.

— பர் துபாயிலிருந்து காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட் வழியாக தேராவிற்கு பயணிக்க: அல் மக்தூம் பிரிட்ஜ் மற்றும் இன்ஃபினிட்டி பிரிட்ஜைப் பயன்படுத்தலாம்.

— உம் ஹுரைர் சாலை வழியாக பர் துபாயிலிருந்து தேராவிற்கு பயணிக்க: அல் மக்தூம் பிரிட்ஜை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.

— பர் துபாயிலிருந்து தேராவிற்கு ஷேக் சையத் சாலை வழியாக பயணிக்க: அல் கர்ஹூத் பிரிட்ஜ், அல் மக்தூம் பிரிட்ஜ், இன்ஃபினிட்டி பிரிட்ஜ் மற்றும் பிசினஸ் பே கிராசிங் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

— பர் துபாயில் இருந்து தேரா வரை ஓத் மேத்தா சாலை வழியாக பயணிக்க: அல் மக்தூம் பிரிட்ஜ் மற்றும் அல் கர்ஹூத் பிரிட்ஜ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

— அல் ரியாத் ஸ்ட்ரீட் வழியாக பர் துபாயிலிருந்து தேராவிற்கு பயணிக்க: அல் மக்தூம் பிரிட்ஜை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.

— பர் துபாய் மற்றும் தேரா இடையே பயணிக்க:  ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை போன்ற முக்கிய சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!