அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து சேவையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ள அபுதாபி ITC..!!

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதன் பொது பேருந்து சேவைகளில் பல மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நகரம் முழுவதும் பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

ITC மாற்றம் செய்துள்ள புதிய சேவைகள்:

  1. டவுன்டவுன் அபுதாபி மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு இடையேயான வழித்தடங்களில், வேகமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இப்போது குறைந்த நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
  2. சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் செல்ல வேண்டிய இடத்தை சிறப்பாக அணுகும் வகையில் ஷேக் சையத் கிராண்ட் மசூதிக்கு (Sheikh Zayed Grand Mosque) ஒரு புதிய வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  3. புதிய நேரடி பேருந்து சேவைகள் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை தொடங்கப்பட்டுள்ளன.
  4. அல் பஹியா, அல் ஷஹாமா, அல் ரஹ்பா மற்றும் அல் சம்ஹா ஆகிய இடங்களில் உள்ள பாதைகள் சீர்படுத்தப்பட்டுள்ளன.
  5. பனியாஸில் (Baniyas) உள்ள போக்குவரத்து நெட்வொர்க் இப்போது பேருந்து சேவைகளை மேம்படுத்தியுள்ளது.
  6. டவுன்டவுன் அபுதாபி மற்றும் கலீஃபா சிட்டி இடையே சேவைகளின் அதிர்வெண் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!