அமீரக செய்திகள்

UAE: டிரைவராக இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! ஒரே நாளில் பெற்ற 100 கோடி ரூபாய்..!!

இந்த வார மஹ்சூஸ் லைவ் டிராவில் 50 மில்லியன் திர்ஹம்களை வென்ற வெற்றியாளர் அமீரகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்று 50 மில்லியன் திர்ஹம்களை பெறுபவர் 36 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் ராணா என்பவர் என்றும் டிராவிற்கு விதிக்கப்பட்ட நாட்களில் கடைசி நாளன்றே டிக்கெட்டை வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற மஹ்சூஸ் டிராவின் 48 வது பதிப்பில் 50,000,000 திர்ஹம் பரிசு வென்ற பிறகு இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

மாதம் 6,000 திர்ஹம்களுக்கு கீழ் சம்பாதிக்கும் இவருக்கு, நான்கு வயது மகள் மற்றும் இரண்டு வயது மகன் உள்ளது.

வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில் “டிராவிற்கான எண்களை தேர்வு செய்யும் போது நான் கண்களை மூடிக்கொண்டு எடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் “விலையுயர்ந்த பொருட்களைப் பெற வேண்டும் என்று நான் கனவு கண்டதில்லை. எல்லோரையும் போல் நானும் ஒரு எளிய மனிதன் தான், அதனால் நான் இந்த மஹ்சூஸ் டிராவில்வென்றதை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றிருக்கிறார்.

மேலும், “என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவர் மஹ்சூஸ் டிராவில் ஒருவர் 50 மில்லியன் திர்ஹம் வென்றதாக கூறும் போது நான், ‘நல்லது, அப்படியானால் என் எண்களைச் சரிபார்க்கிறேன்’ என்றேன். முதல் மூன்று எண்கள் பொருந்தியதைப் பார்த்ததும், டிக்கெட்டின் விலை திருப்பிக் கிடைத்துவிடும் என நான் மகிழ்ச்சியடைந்தேன்” என்று கூறி சிரித்துள்ளார் மல்டிமில்லியனரான ஜுனைத்.

வெற்றி பெற்ற பணத்தில் தற்போதைய திட்டங்களை அவர் கூறும் போது”தற்போது என்னிடம் 100,000 திர்ஹம் கடன் உள்ளது; என் சகோதரனுக்கும் பெரிய கடன் உள்ளது. நான் முதலில் அதை அடைப்பேன். எனது அடுத்த திட்டம் எனது குடும்பத்திற்கு துபாயிலும் பாகிஸ்தானிலும் ஒரு பெரிய வீட்டை வாங்குவதாகும். நான் எனது கனவு காரை விரைவில் வாங்க விரும்புகிறேன், இது நிசான் ஸ்கைலைன் GTR.” என்றுள்ளார்.

அத்துடன் அவர் தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!