UAE: சினோஃபார்மின் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற 100 க்கும் மேற்பட்ட மையங்களில் வசதி..!! அபுதாபி சுகாதாரத்துறை அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் தற்போது அதன் பூஸ்டர் வகை தடுப்பூசியை (booster shots) பெற்றுக்கொள்ளலாம் என்று அமீரகத்தின் தேசிய நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு (NCEMA) சமீபத்தில் அறிவித்திருந்தது.
சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது அபுதாபி சுகாதாரத் துறை குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பு தடுப்பூசிக்கான இரண்டாம் டோஸினைப் போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்த எவரும் அபுதாபியின் சுகாதாரத் துறை இலவசமாக வழங்கி வரும் சினோஃபார்ம் பூஸ்டர் தடுப்பூசியினை போட்டுக் கொள்ளலாம்.
இதனைப் போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் அபுதாபி முழுவதும் உள்ள 100 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகவே சென்று இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியினைப் போட்டுக் கொள்ள தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்களை doh.gov.ae என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
As part of continuous efforts to protect public health, @DoHSocial is offering a free Sinopharm booster dose to those who received their second dose at least six months ago. The free booster is available by walk-in at any of the 100+ vaccination centres across #AbuDhabi. pic.twitter.com/9POGV21kSU
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) May 29, 2021