அமீரக செய்திகள்

துபாய்: ஹத்தா மலைகளை சுற்றி சைக்கிள், இ-ஸ்கூட்டர்களின் மூலம் ரைடு செல்லும் வசதி..!! RTA தொடங்கியுள்ள புதிய முயற்சி….!!

அமீரகத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் ஒன்றான ஹத்தாவானது பலரது விருப்பமான இடமாகும். ஹத்தா மலைப்பகுதி, அதன் தனித்துவமான புவியியல் இருப்பிடம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு விருப்பங்கள் போன்றவற்றிற்கு மிகவும் பிரபலமானது ஆகும்.

இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்திற்கு இனி பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பைக் மற்றும் இ-ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுத்துச் சென்று அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனையொட்டி துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) 9 கிமீ பாதைக்கு ஹத்தாவைச் சுற்றிய 11 இடங்களில் பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் நிலையங்களை திறந்துள்ளது.

ஏற்கனவே, இந்தாண்டின் முதல் காலாண்டில் பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் நிலையங்களின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பெரும்பாலானோரின் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதல் காலாண்டில் மட்டும் 1,902 பயணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 984 பயணங்களுக்கு இ-ஸ்கூட்டர்கள் மற்றும் 918 பயணங்களுக்கு பைக்குகள் மற்றும் மவுண்டைன் பைக்குகள்  பங்களித்துள்ளன. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட சேவைகளில் 93 சதவீதம் பேர் திருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

RTA வெளியிட்டுள்ள தகவலின் படி, இப்போது ஹத்தாவில் சுமார் 650 சைக்கிள்கள், 250 இ-ஸ்கூட்டர்கள், 250 பைக்குகள் மற்றும் 150 மவுண்டைன் பைக்குகள் நிலையங்களில் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன. எனவே, ஹத்தா மலைப்பகுதிக்கு செல்லும் பார்வையாளர்கள் இவற்றை வாடகைக்கு எடுத்து 11.5 கிமீ நீளமுள்ள டிராக்கில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையங்கள் மற்றும் ரைடர்களுக்கான ஓய்வு நிறுத்தங்கள், ஹத்தா ஹெரிட்டேஜ் வில்லேஜ், வாதி ஹத்தா பார்க், ஹத்தா ஹில் பார்க், ஹத்தா பள்ளத்தாக்கு மற்றும் பொது பேருந்து நிலையம் உள்ளிட்ட ஹத்தாவில் ஆங்காங்கே உள்ள சுற்றுலா மையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!