அமீரக செய்திகள்

துபாய்: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தொழிலாளர்களுக்கு இலவச டிக்கெட், அரை நாள் விடுமுறை வழங்கும் இந்திய நிறுவனம்..!!

ICC T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெறும் நிலையில் பலரும் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 24 ம் தேதி நிகழவுள்ளது. அமீரகத்தில் உள்ள வெளிநாட்டவர்களில் அதிகமாக இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் இருப்பதால் இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் உள்ளது. இந்த நிலையில் ஒரு துபாய் தொழிலதிபர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 100 தொழிலாளர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தனூப் குழுமத்தின் துணைத் தலைவரும், பிரபல கிரிக்கெட் ஆர்வலருமான அனிஸ் சஜன், இந்தியா-பாகிஸ்தான் T 20 போட்டிக்கான 100 டிக்கெட்டுகளை தனது நிறுவனத்தின் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு வழங்குவார் என்றும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போட்டிக்கு மற்றொரு 100 மற்றும் இந்தியாவிற்கு எதிராக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான தகுதி பெற்ற அணியுடன் நடைபெறும் போட்டிக்காக 100 டிக்கெட் என்று அவர் வழங்கவுள்ளார்.

Mr.கிரிக்கெட் என ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபலமாக அறியப்படும் சஜன் துபாய் ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்க விரும்பும் தொழிலாளர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக இந்த முடிவு எடுத்துள்ளார்.

இந்தோ-பாக் போட்டிகள் அடிக்கடி நடக்காமல், அவர்கள் 2 முதல் 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மோதிக் கொண்டிருப்பதால், அவர் தனது நிறுவனத்தின் கடின உழைப்பாளிகளான ப்ளூ காலர் தொழிலாளர்களை மகிழ்ச்சியடைய செய்ய இலவசமாக டிக்கெட் மட்டும்  கொடுக்காமல் அவர்கள் வேலையில் இருந்து அரை நாள் விடுப்பு எடுக்க அனுமதிப்பதோடு, தொழிலாளர்களுக்கு கிரிக்கெட் ஸ்டேடியம் செல்ல இலவச போக்குவரத்து மற்றும் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், தொழிலாளர்கள் தங்களுக்கு பிடித்த ரசிகரின் ஜெர்சி மற்றும் Mr கிரிக்கெட் கையொப்பமிட்ட ஜாக்கெட்டுகள் மற்றும் தொப்பிகளையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டேடியத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு, நிறுவனம் அதன் சில கிடங்குகளில் கிரிக்கெட் போட்டியைக் காண சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெறும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!