அமீரக செய்திகள்

அமீரகம்,இந்தியா இடையேயான விமானத்திற்கான டிக்கெட் வெறும் 300 திர்ஹம்ஸ்..!! அதிரடி தள்ளுபடியை அறிவித்த ஏர் அரேபியா..!!

ஷார்ஜாவை மையமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனமான ஏர் அரேபியா இந்தியாவிற்கு மிகக்குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பயண மற்றும் சுற்றுலாத் துறையினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தினை முன்னிட்டு விமான டிக்கெட்டிற்கு இந்த தள்ளுபடி கட்டணங்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவிற்கு செல்வதற்கான ஒரு வழிப் பயணத்திற்கான விமான டிக்கெட் கட்டணம் 300 திர்ஹம்ஸாக குறைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஏர் அரேபியா விமான நிறுவனமானது சமீபத்தில், ஷார்ஜாவிலிருந்து தனது விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இலவச உலகளாவிய கோவிட் -19 மருத்துவ காப்பீட்டை அறிவித்திருந்தது. இந்த இலவச காப்பீடைப் பெற பயணிகள் எந்த ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் டிக்கெட்டினை முன்பதிவு செய்தாலே போதும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த மருத்துவக்காப்பீடானது பயணத்திட்டத்தில் புறப்பட்ட நாளிலிருந்து 31 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், இதில் மருத்துவ செலவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட செலவுகள் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், airarabia.com வலைத்தளத்தின் மூலமோ அல்லது 06-5580000 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ பயணிகள் தள்ளுபடி கட்டணத்தைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!