அமீரக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இலவச காலிங் ஆப்களை VPN மூலம் அணுகலாமா? சந்தேகங்களுக்கு பதில் இதோ..

ஐக்கிய அரபு அமீரகத்தில் இலவச காலிங் ஆப்களுக்கு (free calling apps) அனுமதி உண்டா? இது போன்ற இலவச காலிங் ஆப்களை VPN மூலம் அணுகலாமா? இந்த மாதிரியான சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் இருக்கலாம். இந்த கேள்விகளுக்கான பதில்களையும், விளக்கங்களையும் இங்கே தெரிந்துகொள்வோம்.

அமீரகத்தில் சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவது தொடர்பான 2021 ஆம் ஆண்டின் 34 ஆம் எண் சட்டத்தின் விதிகள் மற்றும் 2017 இன் இணைய அணுகல் மேலாண்மை குறித்த TDRA ஒழுங்குமுறைக் கொள்கை போன்ற விதிகள் நடைமுறையில் உள்ளன.

எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கின் (Virtual Private Network – VPN) பயன்பாடு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி பயன்படுத்தப்பட்டால் அது சட்டவிரோதமானது அல்ல. ஆகஸ்ட் 2016 இல் TDRA வெளியிட்ட அறிக்கையில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்நோக்கங்களுக்காக VPN ஐப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று இலவச டெலி/வீடியோ அப்ளிகேஷன்களில் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (‘VOIP’) அழைப்புகளுக்கு VPN ஐப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி உண்டு. இருப்பினும், VOIP அழைப்புகளைச் செய்ய VPN ஐப் பயன்படுத்தி இணையத்தில் TDRA ஆல் தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளை நீங்கள் அணுக முடியாது. அதேசமயம் ஐக்கிய அரபு அமீரக சைபர் சட்டத்தின் 10 வது பிரிவின்படி, VPN தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்துவது அமீரகத்தில் கடுமையான குற்றமாகும்.

மேலும், ஒரு குற்றத்தைச் செய்யும் நோக்கத்திற்காக அல்லது அந்த குற்றத்தை கண்டுபிடிப்பதைத் தடுக்கும் நோக்கத்திற்காக மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமான முகவரியைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர் நெட்வொர்க் நெறிமுறையை (computer network protocol address) சட்டவிரோதமாக அணுகுபவர்களுக்கு, அமீரக சட்டத்தின்படி 5 இலட்சம் திர்ஹம்களுக்குக் குறையாத மற்றும் 2 மில்லியன் திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டில் ஏதேனும் ஒரு தண்டனை விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, TDRA இணைய அணுகல் விதிமுறைகள் (Internet Access Regulations), அமீரகத்தில் தடைசெய்யப்பட்ட இன்டர்நெட் உள்ளடக்கங்களின் (internet content) பல்வேறு பட்டியலைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது TDRA இணைய அணுகல் விதிமுறைகளின் உட்பிரிவு 1 மற்றும் உட்பிரிவு 14 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உட்பிரிவு 1 – தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுதல்:

தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுவதற்கு பயனர்களை அனுமதிக்கும் அல்லது உதவும் ப்ராக்ஸி சர்வர்கள் மற்றும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்ஸ் சேவைகள் (VPN) ஆகிய இணைய உள்ளடக்கம் இந்த பிரிவில் அடங்கும்.

பிரிவு 14 – சட்டவிரோத தொடர்பு சேவைகள்:

சட்டவிரோதமான தகவல் தொடர்பு சேவைகளை அணுகுவதை அனுமதிக்கும் இணைய உள்ளடக்கம் இந்தப் பிரிவில் அடங்கும். VOIP அழைப்புகளைச் செய்ய VPN மூலம் தடைசெய்யப்பட்ட ஏதேனும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தினால், அத்தகைய செயல் சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, மேலே குறிப்பிட்டுள்ளபடி அபராதம் விதிக்கப்படலாம். அதுபோல, அமீரகத்தில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் ஆப்கள் மூலமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட VPN மற்றும் VOIP ஐப் பயன்படுத்துவது குற்றமாக கருதப்படலாம்.

ஆகையால், ஐக்கிய அரபு அமீரகத்தால் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இணையதளம் மற்றும் ஆப்களில் VPN மற்றும் VOIPஐ நீங்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், VOIP அழைப்புகளைச் செய்யக்கூடிய இலவச காலிங் ஆப்களுக்கு அமீரகத்தில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துகொள்வதும் அவசியமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!