அமீரக செய்திகள்

அமீரகத்தில் 12ºC வரை வெப்பநிலை குறையும்!! மழை பெய்ய சாத்தியமுள்ளதாக NCM எச்சரிக்கை…..

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), நாட்டில் இன்றைய தினம் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், வடக்கில் மழையை உருவாக்கக்கூடிய வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், சில சமயங்களில் புத்துணர்ச்சியூட்டும் லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அபுதாபியில் 29ºC ஆகவும், துபாயில் 30ºC ஆகவும் வெப்பநிலை உயரும் என்றும், அதேசமயம் அபுதாபியில் 21ºC ஆகவும், துபாயில் 19ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 12ºC ஆகவும் குறையும் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது.

அத்துடன் இன்றிரவு மற்றும் நாளை (புதன்கிழமை, டிசம்பர் 6) காலை ஈரப்பதமான வானிலை நீடிக்கலாம் மற்றும் மேகமூட்டம் அல்லது மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அபுதாபியில் 40 முதல் 85 சதவீதம் வரையிலும், துபாயில் 35 முதல் 80 சதவீதம் வரையிலும் ஈரப்பதம் இருக்கும் என்று மையம் தெரிவித்துள்ளது.

அரேபிய வளைகுடாவில் அலைகள் மிதமான நிலையிலும், மற்றும் ஓமன் கடலில் சில சமயங்களில் கடலின் நிலைமைகள் மிதமானதாகவும் இருக்கும் என்று NCM கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!