அமீரக செய்திகள்

அபுதாபி பிக் டிக்கெட்டின் கடைசி டிராவில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 10 மில்லியன் திர்ஹம்ஸை வென்று அசத்தல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான டிராக்களில் ஒன்றான அபுதாபி பிக் டிக்கெட் தற்போது தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், அதன் கடைசி டிராவான மார்ச் மாதத்தின் டிரா முடிவில் இந்திய வெளிநாட்டவர் ஒருவர் முதல் பரிசான 10 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை வென்று அதிர்ஷ்டகாரராகியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ் கண்ணன் என்பவர் கடந்த மார்ச் 29 அன்று வாங்கிய டிக்கெட் எண் 056845 மூலம், பிக் டிக்கெட் டிரா 262ல் வெற்றி பெற்று கிராண்ட் பரிசை வெல்லும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார். மேலும், பிக் டிக்கெட்டின் செயல்பாடுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக அறிவிக்கப்பட்ட டிராவின் முடிவில் 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசையும் இந்தியர் ஒருவரே வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த மாதம் முகமது ஷெரீஃப் என்பவர், 15 மில்லியன் திர்ஹம்ஸ் டிராவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களால் டிக்கெட்டில் வழங்கப்பட்ட அவரது இந்திய மற்றும் அமீரகத் தொலைபேசி எண்களில் அந்த வெற்றியாளரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. எவ்வாறாயினும், வெற்றி குறித்து அவரிடம் தெரிவிக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிச்சர்ட் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் மிக பிரபலமான அபுதாபி பிக் டிக்கெட் டிரா, அமீரகத்தின் ஒழுங்குமுறை கேமிங் தேவைகளுக்கு இணங்க இம்மாதம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இது குறித்து பிக் டிக்கெட் டிராவின் தொகுப்பாளர் ரிச்சர்ட் பேசுகையில், “பிக் டிக்கெட் டிரா தனது டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துகிறது. இது ஒரு குறுகிய காலத்திற்கு என்று நம்புகிறோம். புதுப்பிப்புகளுக்கு எங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடரவும், விரைவில் நேர்மறையான செய்தி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட் வாங்குதல், அக்கவுண்டில் உள்நுழைதல் மற்றும் புதிய கணக்கை உருவாக்குதல் போன்ற சில வசதிகள் மறு அறிவிப்பு வரும் வரை முடக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!