அமீரக செய்திகள்

துபாய் விமான நிலையத்தில் குழந்தைகளுக்கென தனி பாஸ்போர்ட் கவுண்டர்கள் திறப்பு..!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் போன்ற இளம் பயணிகளுக்கென்று பிரத்யேமாக புதிய பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு பாதைகள் மற்றும் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக துபாயின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) தெரிவித்துள்ளது.

துபாய் விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய பாஸ்போர்ட் கவுண்டர்கள் குறித்து GDRFA தெரிவிக்கையில், துபாய்க்கு பயணிக்கும் பயணிகளுடன் வரும் 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்காக புதிய பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான இந்த புதிய கவுண்டர்கள் மிகவும் தனித்துவமான விண்வெளி அமைப்புடன் பிரகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இன் வருகை பகுதியில் (Arrival Hall) அமைந்துள்ளதாகவும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், குழந்தைகள் தங்கள் சொந்த பாஸ்போர்ட்டுகளை முத்திரையிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவதுடன் துபாய் GDRFA ஊழியர்களின் சீருடையை அணிந்த, சலீம் மற்றும் சலாமா என பெயரிடப்பட்டுள்ள இரண்டு பொம்மைகள் ஆகியவற்றால் குழைந்தைகள் வரவேற்கப்படுவார்கள் என்றும் GDRFA குறிப்பிட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!