அமீரக செய்திகள்

அபுதாபி ஷேக் சயீத் பாலத்தில் ஆபத்தான சாகசங்களை செய்த சைக்கிள் ஓட்டிகளை கைது செய்த காவல்துறை..!

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் பாலத்தில் சைக்கிள் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பல்வேறு நாட்டினரை அபுதாபி போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் பதிவிட்ட அந்த வீடியோ மூலம் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஆபத்தான சாகசங்களை நிகழ்த்துவது தெரியவந்தது.

இது போன்ற செயல்கள் பொறுப்பற்ற நடவடிக்கையும், போக்குவரத்து விதி மீறலாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேக் சயீத் பாலத்தில் சைக்கிள் மூலம் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது அவர்களது உயிருக்கும், சாலையில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆபத்தான இடங்களில் சைக்கிள் ஓட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்மறையான நடத்தைகள் ஆகும், இத்தகைய செயல்களை செய்த குற்றவாளிகள் சட்டப் பொறுப்புக்கு ஆளாகுவார்கள் என்று போலீசார் விளக்கினர். சாகசம் செய்த இளைஞர்கள் தங்கள் உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காமல், சட்டங்களுக்கு இணங்கவும் பொறுப்புடன் இருக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!