அமீரக செய்திகள்

UAE: HABIBI COME TO DUBAI.. கடந்த 6 மாதத்தில் துபாய்க்கு 7.1 மில்லியன் சர்வதேச பார்வையாளர்கள் வருகை.. ஆய்வில் தகவல்..!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் துபாய்க்கு 7.12 மில்லியன் சர்வதேச பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 183 சதவீதத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல்  ஜூன் மாதங்கள் இடையில், 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருகை தந்திருந்தனர்.

2022 இன் முதல் அரை ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2019 முதல் ஆறு மாதங்களில் எட்டப்பட்ட எண்ணிக்கையை கடந்துள்ளது. உலகப் பொருளாதாரம், சுற்றுலாத் துறையில் முன்னோடியில்லாத சவால்கள் மற்றும் பெரிய பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொற்றுநோய்க்கு பின் விரைவாக விமான சேவைகள் இயக்கப்பட்டதால் அமீரகத்தின் திறன் வளர்ச்சியில் வளர்ந்துள்ளதாக துபாய் அரசு மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது.

செக் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தரவுகளின்படி,  2022இன் முதல் ஆறு மாதத்தில் ஹோட்டல்களின் முன்பதிவு வளர்ச்சி 74 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுவே உலகின் மிக உயர்ந்த சதவீதமாகும். மேலும் உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் பயண இடங்களின் பட்டியலில் துபாய் முதல் இடத்தில் உள்ளதாக டிரிப் அட்வைசர் டிராவலர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி அதற்கான சாய்ஸ் விருதும் அமீரகத்திற்கு வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
error: Content is protected !!