ஷாப்பிங் ஆஃபர்ஸ்

UAE: DSF இறுதிவார சலுகை… பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி…!!

அமீரகத்தில் நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் தனது இறுதி வாரத்தை அடைந்திருக்கும் வேளையில் இறுதி வார சலுகையாக பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் மெகா விற்பனையானது DSF குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா விற்பனையானது ஜனவரி 28, வெள்ளிக்கிழமை தொடங்கி ஜனவரி 30, ஞாயிறு வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில், 500 பிராண்டுகளுக்கு துபாயில் உள்ள DSF நடைபெறும் 2,000 க்கும் மேற்பட்ட கடைகளில் பல்வேறு வகையான பொருட்களில் தள்ளுபடியைப் பெறலாம்.

இந்த விற்பனையானது ஆடைகள், வீட்டுப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் போன்றவற்றில் 25 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. DSF இன் 27வது பதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று துவங்கப்பட்டு வரும் ஜனவரி 30 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!