அமீரக செய்திகள்

துபாய்: டிரக் டிரைவர்கள் ஓய்வெடுக்க 3 இலட்சம் சதுர மீட்டருக்கு 19 டிரக் ரெஸ்ட் ஸ்டாப்கள்!! உணவகங்கள், கிளினிக், லாண்டரி என பல்வேறு வசதிகளும் வழங்கப்படும் என தகவல்..

துபாயில் டிரக் டிரைவர்களின் நலம் கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கென துபாயின் பல முக்கிய இடங்களில் 19 டிரக் ரெஸ்ட் ஸ்டாப் மற்றும் லே-பைகளை (lay-bys) அமைப்பதற்காக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனியார் துறையுடன் கைகோர்த்துள்ளது.

இந்த டிரக் லே-பைகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் (fuel station), மோட்டல்கள் (Motel), மெயின்டனன்ஸ் ஒர்க் ஷாப்புகள், உணவகங்கள், தொழுகை அறைகள், ஓட்டுநர் பயிற்சி மையங்கள், கிளினிக்குகள், மருந்தகங்கள், லாண்டரி, எக்சேஞ்ச் ஷாப்புகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் நலன்களுக்கான வசதிகள் போன்ற பல சேவைகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல, டிரக் ரெஸ்ட் ஸ்டாப்களில் பிரார்த்தனை அறைகள், டீசல் நிரப்பும் நிலையங்கள், உணவகங்கள், ஒர்க் ஷாப்புகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஓய்வு இடங்கள் ஆகிய வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மொத்தம் 226,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ள மூன்று ஒருங்கிணைந்த டிரக் லே-பைகள் அடங்கும் என்றும் ஒவ்வொன்றும் 120 முதல் 200 டிரக்குகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு இடமளிக்கும் திறனுடையவை என்றும் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்த டிரக் ரெஸ்ட் ஸ்டாப்ஸ் ஒவ்வொன்றும் 5,000 முதல் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் 30 முதல் 40 டிரக்குகளுக்கு இடமளிக்கும் என்று கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு RTA, அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்துடனும் (ADNOC) அல்முதகமேலா டெஸ்ட்டிங் அண்ட் ரெஜிஸ்டரேஷனுடனும் (Almutakamela Vehicle Testing and Registration) கூட்டாண்மை வைத்துள்ளது.

முதலாவது லே-பை, அல்முதகமேலா டெஸ்ட்டிங் அண்ட் ரெஜிஸ்டரேஷன் உடனான கூட்டாண்மையின் கீழ், சுமார் 200 டிரக்குகளை நிறுத்தும் அளவிற்கு ஜெபல் அலி ஃப்ரீ சோன் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஷேக் முகமது பின் சையத் சாலையில் அமைக்கப்படவுள்ளது. இதன் பரப்பளவு 100,000 சதுர மீட்டர் ஆகும்.

அதுபோல, ADNOC உடனான கூட்டாண்மையின் கீழ், எமிரேட்ஸ் சாலைக்கு அருகில், அல் டாய் ரேஸ்ட்ராக்கிற்கு அடுத்ததாக 76,000 சதுர மீட்டர் பரப்பளவிலான இரண்டாவது லே-பை அமைக்கப்படவுள்ளது. இது 150 டிரக்குகளுக்கு இடமளிக்கும்.

மூன்றாவது லே-பையும், அல்முதகமேலாவால் மேற்கொள்ளப்படுகிறது, சுமார் 51,000 சதுர மீட்டர் பரப்பளவுடன் 120 டிரக்குகளுக்கு இடமளிக்கும் இந்த லே-பை, துபாய் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் (DIC) நுழைவாயிலுக்கு அருகில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், ADNOC உடன் இணைந்து, RTA துபாய் முழுவதும் டிரக்குகள் தினசரி அதிகம் வரக்கூடிய பின்வரும் ஆறு முக்கிய இடங்கள் மற்றும் லாஜிஸ்டிக் நகரங்களில் 16 டிரக் ரெஸ்ட் ஸ்டாப்புகளை உருவாக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடங்கள்:

  • ஷேக் முகமது பின் சையத் ரோடு
  • எமிரேட்ஸ் ரோடு
  • துபாய்-ஹத்தா ரோடு
  • துபாய்-அல் அய்ன் ரோடு
  • ஜெபல் அலி – லெஹ்பாப் ரோடு
  • அல் அவீர் ரோடு

இந்த 19 டிரக் ரெஸ்ட் ஸ்டாப் மற்றும் லே-பைகளின் மொத்தப் பரப்பளவு மட்டுமே 300,000 சதுர மீட்டருக்கும் அதிகமாக உள்ளது, இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரக்குகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!