அமீரகவாசிகளுக்கு ஒரு நல்ல சான்ஸ்.. 3,000 பொருட்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடியை அறிவித்த யூனியன் கோப்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய நுகர்வோர் கூட்டுறவு நிறுவனமான யூனியன் கோப் ஆனது, நாளை பிப்ரவரி 18 முதல் 20 வரை என மூன்று நாட்களுக்கு அதன் அனைத்து கிளைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
யூனியன் கோப் நிறுவனத்தால் “பர்ஸ்ட் கால்” என பெயரிடப்பட்டுள்ள விளம்பர பிரச்சாரத்தின் கீழ் அமீரகத்தில் உள்ள அதன் கிளைகளில் இந்த மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நடக்கும் என்றும், இந்த பிரச்சாரத்திற்காக 5 மில்லியன் திர்ஹம்களை யூனியன் கோப் நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கும் வகையில், அதன் அனைத்து யூனியன் கோப் கிளைகளும், அதே போன்று அல் பர்ஷா மால், அல் வர்கா சிட்டி மால், அல் பர்ஷா சவுத் மால் மற்றும் எதிஹாத் மால் ஆகியவற்றில் உள்ள யூனியன் கோப்பின் விற்பனை நிலையங்களும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும் எனவும் யூனியன் கோப் நிறுவனம் சார்பாக கூறப்பட்டுளளது.
யூனியன் கோப்பின் ஹேப்பினஸ் மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் இயக்குனர் சுஹைல் அல் பஸ்தாகி கூறுகையில், சமூக உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பெரிய தள்ளுபடிகளை வழங்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் விளம்பர பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த பிரச்சாரத்திற்கு யூனியன் கோப் 5 மில்லியன் திர்ஹம்களை ஒதுக்கியுள்ளது மற்றும் காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், தண்ணீர், பால் பொருட்கள், இறைச்சி, இனிப்புகள், மசாலா பொருட்கள், அரிசி, எண்ணெய் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 வகையான பொருட்களின் மீது இந்த தள்ளுபடிகள் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.