அமீரக செய்திகள்

UAE: புகழ்பெற்ற மஜித் அல் ஃபுத்தைம் குழும நிறுவனர் மரணம்… இரங்கல் தெரிவித்த துபாய் ஆட்சியாளர்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக மிக்கிய தொழிலதிபரும் புகழ்பெற்ற மஜித் அல் ஃபுத்தைம் (Majid Al Futtaim) குழுமத்தின் நிறுவனருமான மஜித் அல் ஃபுத்தைம் அவர்கள் மரணமடைந்து விட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மரணமடைந்ததையொட்டி அமீரக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமீரக துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஃபுத்தைம் மறைந்ததற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்தி ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், அவரை துபாயின் மிக முக்கியமான வணிகத் தலைவர்களில் ஒருவர் என்று பாராட்டியிருக்கிறார்.

லூலூ குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி M.A., ஃபுத்தைம் அவர்களின் மறைவு பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் “பல வணிகத் துறைகளில், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிராந்தியத்தில் சில்லறை விற்பனைத் துறையின் வளர்ச்சியில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார்” என கூறியுள்ளார்.

அல் ஃபுத்தைம் 1992 இல் முதன் முறையாக Majid Al Futtaim Holding நிறுவனத்தை தொடங்கினார்.

இது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 300க்கும் மேற்பட்ட கேரிஃபோர் (carrefour) சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளை நடத்துகிறது.

இந்த நிறுவனத்தின் மால் ஆஃப் தி எமிரேட்ஸ், துபாயில் ஒரு முக்கிய தளமாகும். ஏப்ரல் 2021 இல், ஃபோர்ப்ஸின் 35 வது வருடாந்திர உலக பில்லியனர்கள் வரிசையில் அவரை உலகின் முதல் 10 பணக்கார அரேபியர்களில் ஒருவராக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!