அமீரக செய்திகள்

துபாய் பார்க்கில் புதிய டிக்கெட் மெஷின்..!! முனிசிபாலிட்டி அறிமுகப்படுத்திய புதிய சிஸ்டமை எப்படிப் பயன்படுத்துவது..??

துபாய் முனிசிபாலிட்டியானது பார்க்கில் உள்ள டிக்கெட் வாங்கும் அலுவலகத்தில் புதிய டிக்கெட் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பானது முதல் கட்டமாக துபாயில் சஃபா பார்க்கில் இருக்கும் டிக்கெட் அலுவலகத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிக்கெட் சிஸ்டம் பார்வையாளர்கள் தங்கள் தொலைபேசி, கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி நுழைவுக் கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கிறது.

இதேபோல் அடுத்த கட்ட நிறுவலின் போது எமிரேட்டில் உள்ள மற்ற முக்கிய பூங்காக்களுக்கும் அவை அறிமுகப்படுத்தப்படும் என்று துபாய் முனிசிபாலிட்டியின் கீழ் இயங்கும் துபாய் பப்ளிக் பார்க்ஸ் அறிவித்துள்ளது. மேலும், இந்த டிக்கெட் மெஷின் பார்வையாளர்களை நோல் கார்டு போன்ற பிற கட்டண விருப்பங்களையும் பயன்படுத்த அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

டிக்கெட் மெஷினை பயன்படுத்துவது எப்படி?

  1. டிக்கெட் மெஷினின் ஸ்கிரீனில் அரபு அல்லது ஆங்கிலம் ஆகிய விருப்பங்களில் உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து, ‘Entry Tickets’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் பணம் செலுத்த விரும்பும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உள்ளிட்டு, ‘Next’ என்பதைத் தட்டவும்.
  3. அடுத்ததாக,  ‘Pay by Card’ என்ற பட்டனைக் கிளிக் செய்து, ஸ்லாட்டில் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைச் செருகியோ அல்லது Samsung Pay, Google Pay அல்லது Apple Payஐப் பயன்படுத்தியோ கட்டணத்தைச் செலுத்த விருப்பம் இருக்கும்.
  4. பணம் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதும், QR குறியீட்டுடன் கூடிய ரசீதின் பிரிண்ட் அவுட்டைப் பெறுவீர்கள்.
  5. இறுதியாக, இ-கேட் இயந்திரத்தின் ரீடரின் மேல் QR குறியீட்டை வைக்கவும், வெளிச்சம் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருந்து பூங்காவிற்குள் நுழையவும்.

சஃபா பார்க்கின் சிறப்பம்சங்கள்:

1975ல் துபாயில் கட்டப்பட்ட முதல் பொதுப் பூங்கா சஃபா பார்க் ஆகும். இதில் விளையாட்டுப் பகுதிகள், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள் மற்றும் பார்பிக்யூ பிட்கள் போன்ற விளையாட்டு வசதிகள் உள்ளன. எனவே, இது குடும்பங்கள், விளையாட்டு பிரியர்கள் மற்றும் பார்பிக்யூவை ரசிக்க விரும்புவோருக்கு சிறந்த இடமாகும்.

நுழைவு கட்டணம்:

  • பெரியவர்கள் -3திர்ஹம்
  • குழந்தைகள்-இலவச அனுமதி
  • மாற்றுத்திறனாளிகள்-துபாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சனத் அட்டையைக் (Sanad card) காண்பித்தால் மாற்றுதிறனாளிகளும் அவர்களுடன் வரும் இரண்டு நபர்களும் இலவசமாக நுழையலாம்.

சஃபா பார்க் செயல்படும் நேரம்:

  • ஞாயிறு முதல் புதன் வரை – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை.
  • வியாழன், வெள்ளி, சனி மற்றும் பொது விடுமுறை – காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை.
  • ரமலான் காலத்தில் – மதியம் முதல் இரவு 11 மணி வரை.

எப்படி செல்வது?

இந்த பூங்கா அல் சஃபாவில் ஷேக் சையத் சாலைக்கு வெளியே அமைந்துள்ளது. நீங்கள் ஷேக் சையத் சாலையில் இருந்து வருகிறீர்கள் என்றால், E11 இல் இருந்து D69 நோக்கி வெளியேறவும், பின்னர் மற்றொரு D92 எக்ஸிட் வழியாக வெளியேறவும், மற்றும் Safa Park க்கான அடையாளங்களைப் பின்பற்றவும். பூங்காவில் பணம் செலுத்தும் பொது பார்க்கிங் இடங்களும் உள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!