அமீரக செய்திகள்

ஷேக் சையத் சாலைக்கு RTAவின் புதிய எக்ஸிட் பாதை.. பயண நேரம் 30 லிருந்து 10 நிமிடங்களாக குறையும்..!!

துபாயில் உள்ள முக்கிய சாலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து திறன்களை அதிகரிப்பதற்கும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, துபாயின் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான ஷேக் சையது சாலைக்கு துபாய் மெரினா மற்றும் ஜூமைரா பகுதிகளில் இருந்து செல்லும் போது அல் சபா ஸ்ட்ரீட்டில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண RTA பின்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்களின் ஒரு பகுதியாக, துபாய் மெரினாவில் கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட் இன்டர்செக்சனின் திசையில் அல் சபா ஸ்ட்ரீட்டில் ஒரு மணி நேரத்திற்கு 1,500 வாகனங்கள் செல்லும் திறன் கொண்ட வகையில் கூடுதல் எக்ஸிட் பாதையை RTA அமைத்துள்ளது.

இந்த எக்ஸிட் பாதையானது, அல் சபா ஸ்ட்ரீட்டில் இருந்து ஷேக் சையது சாலை – கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட் இன்டர்செக்சனின் திசையில் போக்குவரத்து ஓட்டத்தை சீர்படுத்தும் என்றும், இதனால் அப்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்து திசைகளிலும் எளிதாக வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.

எனவே, மெரினாவிலிருந்து அல் சபா ஸ்ட்ரீட் வழியாக வெளியேறும் பாதைகளின் மொத்த போக்குவரத்து திறன் ஒரு மணி நேரத்திற்கு 900 முதல் 2,400 வாகனங்கள் வரை உயரும். அதாவது, தற்போதுள்ள திறனை விட இது 266% போக்குவரத்து திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த குறுக்கு வழிப்பாதை அல் மார்சா ஸ்ட்ரீட்டில், குறிப்பாக அல் சயோரா ஸ்ட்ரீட் சாலையின் இன்டர்செக்சனில் போக்குவரத்து நெரிசலை கனிசமாக குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், இந்த எக்ஸிட் பாதை அல் சபா ஸ்ட்ரீட் வழியாக ஷேக் சையது சாலைக்கு மெரினா பகுதியில் இருந்து வெளியேறும் பயண நேரத்தை 30 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக குறைப்பதுடன் போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்கும் எனவும் தெரிகிறது.

ஆகையால், பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், ஷேக் சையது சாலையை நோக்கிய புதிய எக்ஸிட் பாதையைப் பயன்படுத்தி, அவர்கள் செல்லும் இடங்களின் அணுகலை மேம்படுத்துமாறு RTA அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!