அமீரக செய்திகள்

அமீரக வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. புதிய ரேடார் கருவி மூலம் கண்காணிக்கும் காவல்துறை..!

அபுதாபி எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கிக்கு அருகே கிங் ஃபைசல் பகுதியில் புதிய ரேடார் பெருத்தப்படுள்ளதாக உம் அல் குவைன் காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அத்துடன் வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைப்பதற்காக உம் அல் குவைனில் புதிய ரேடார் பொருத்தப்பட்டிருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

அமீரகத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் மற்ற வாகனங்களுக்கு இடையே சரியான இடைவெளி கடைபிடிக்குமாறு காவல்துறை தெரிவித்து வருகிறது. வாகன ஓட்டிகள் தங்களது பாதுகாப்பிற்காகவும், சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் சாலை விதிகளை மீறாமல் வேகங்களை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் துவங்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தில், அபுதாபி காவல்துறை, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தி பதிவிட்டு வருகின்றது. வாகன ஓட்டிகள் வாகனத்தின் வேகத்துடன் இயக்குவதால், அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகி விடுகிறது, இதனால் மற்ற பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் அவசரத்தை தவிர்த்து பொறுமையுடன் பயணிக்குமாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!