அமீரக செய்திகள்

அபுதாபியிலிருந்து இலங்கைக்கு புதிய நேரடி விமான சேவையை அறிவித்த ஏர் அரேபியா அபுதாபி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் அரேபியா அபுதாபி (Air Arabia Abudhabi), அபுதாபியில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்புவிற்கு நேரடி விமானச் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் முதல் கட்டமாக வாரந்தோறும் மூன்று நேரடி விமானங்களை கொழும்புவிற்கு இயக்கப் போவதாகவும் ஏர் அரேபியா அபுதாபி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, ஏர் அரேபியா விமானமானது ஜனவரி 3, 2024 முதல் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தையும் கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் நேரடியாக இணைக்கும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பயணிகள் போக்குவரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் அரேபியா குழுமத்தின் CEO அடெல் அல் அலி அவர்கள் பேசுகையில், ஏர் அரேபியாவின் இந்த புதிய விமான சேவை, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கையின் அழகை ரசிக்க பயணிகளுக்கு உதவுவதுடன் மலிவு மற்றும் மதிப்புமிக்க விமானப் பயண அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் முயற்சியையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்த புதிய விமான சேவையின் மூலம் அமீரகத்தின் பயணம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், அமீரகத்தின் தலைநகரை பல இடங்களுடன் இணைப்பதற்கு ஏர் அரேபியா அபுதாபி தனது விரிவாக்க உத்தியை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!