அமீரக செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ்களை AlHosn செயலியில் அப்டேட் செய்யவில்லை என்றால் பள்ளிகளில் அனுமதியில்லை..!! அமீரக அரசின் புதிய அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு கடுமையான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை உங்கள் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் பதிவுகள் அனைத்தும் விரைவில் AlHosn செயலியில்  கண்காணிக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமீரக அரசு கட்டாயமாக்கியுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் குழந்தைகளை அபாயகரமான நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்றும், இது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு அடித்தளமிடும் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) பொது சுகாதாரத்திற்கான துணை செயலாளரான டாக்டர் ஹுசைன் அல் ராண்ட் கூறியுள்ளார்.

சமீபத்தில், அப்கிரேட் செய்யப்பட்ட AlHosn செயலியில், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை விரிவான தடுப்பூசி பதிவுகள் உள்ளன. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதற்கு உதவும்.

குறிப்பாக, உங்கள் குழந்தைகளின் தடுப்பூசி சான்றிதழ்களை செயலியில் அப்டேட் செய்யாவிட்டால், குழந்தைகள் பள்ளிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, ஒவ்வொரு குடியிருப்பாளரும் AlHosn செயலியை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் குழந்தைகளின் தடுப்பூசி பதிவுகள் அதில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, அல் ஹோஸ்ன் செயலியில் உள்ள பதிவுகள் முதலில் வடக்கு எமிரேட்ஸ் மற்றும் துபாய், அபுதாபிக்கு புதுப்பிக்கப்படும். அமீரகத்தில் குழந்தைகளுக்கென கட்டாயமாக சில தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில் காசநோய், டெட்டனஸ், நிமோனியா, டிப்தீரியா, HPV, போன்றவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளும் அடங்கும். அத்துடன், ஒரு சில தடுப்பூசிகள் பள்ளிப் பருவத்தில் நீட்டிக்கப்பட்ட டோஸ்கள் மற்றும் பூஸ்டர்களாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!