அமீரக செய்திகள்தமிழக செய்திகள்

UAE: மதுரையில் 16 மணிநேரம் காத்திருந்த துபாய் பயணிகள்.. விமான நிலையத்தில் பரபரப்பு.. காரணம் என்ன..?

மதுரையில் இருந்து துபாய் வரும் SPICE JET விமானம் இந்திய நேரப்படி தினமும் நண்பகல் 12:45 மணிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டு மீண்டும் காலை 8:45 மணிக்கு மதுரைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் நேற்று விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மதுரைக்கு வர தாமதமானது.

இதனால் மதுரையில் இருந்து துபாய்க்கு வரவிருந்த 176 பயணிகளும் மதுரை விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள SPICE JET ஊழியர்களிடம் கேட்கையில் SPICE JET நிறுவனம் சார்பில் முறையான விளக்கம் எதுவும் தரப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சில பயணிகள் விமானத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர். பின்னர் 126 பயணிகள் மட்டும் துபாய் செல்வதற்காக மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர். SPICEJET நிர்வாகம் சார்பில் பயணிகளுக்கு இரவு உணவை வழங்கி சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்றிரவு துபாயில் இருந்து மதுரைக்கு வந்த SPICE JET விமானத்தில் 126 பயணிகளும் நள்ளிரவு 1.48 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் மதுரை விமான நிலையம் பரப்பரப்பாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!